டுபாயிலிருந்து வந்த பணத்தை முஸ்லீம் தீவிரவாத அமைப்புக்கு கொடுத்த நபர்! விசாரணையில் வெளியான அதிர்ச்சி!

போதைப்பொருள் குற்றங்களுக்காக பானந்துறை – கெசல்வத்தை பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் சில மாதங்களுக்கு முன்பு பேலியகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் குறித்த சந்தேகநபர் தொடர்பில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

சந்தேகநபர் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவருடைய வங்கிக் கணக்கிற்கு டுபாய் நாட்டிலிருந்து இருந்து ஒரு பெரிய தொகை பணம் வைப்பிலிடப்பட்டுள்ளது.

இதையடுத்து அவரது கணக்கிற்கு வந்த பணத்தின் ஒரு தொகுதி இஸ்லாமிய தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் ஒரு அமைப்புக்கு வழங்கப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அதன்படி, சந்தேகநபரை பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.