அஸ்ரா செனிக்கா போடுவதால் ரத்தக் கட்டிகள் உருவாகிறது- புதுப் பிரச்சனை ஆரம்பமா ?

பிரித்தானியாவின் ஆக்ஸ்பேட் கொரோனா தடுப்பு மருந்தான, அஸ்ரா செனிக்காவை போட்ட சுமார் 50 பேருக்கு ரத்தக் கட்டிகள் உருவாகியுள்ளதாக கூறி வேல்ஸ்சொல் அதனை தடை செய்துள்ள நிலையில். நெதர்லாந்தும் தனது நாட்டு மக்களுக்கு அஸ்ரா செனிகா கொரோனா தடுப்பு ஊசியை போட மாட்டோம் என்று சற்று முன்னர் அறிவித்துள்ளார்கள்.

இது போன்ற தகவல் ஒன்று நோர்வே நாட்டிலும் வெளியாகியுள்ளது. அஸ்ரா செனிகா போட்டுக் கொண்ட முதியவர் ஒருவரின் உடலில் சில இடங்களில் ரத்தக் கட்டிகள் ஏற்பட்டுள்ளது. ரத்தம் இவ்வாறு நாளங்களில் உறைய என்ன காரணம் ? ஏன் இந்த மருந்து ஒரு சிலரில் இவ்வாறு எதிர்வினையாற்றுகிறது என்று இதுவரை அன் நிறுவனம் எந்த ஒரு தகவலையும் வெளியிட வில்லை.

ஆனால் பிரித்தானியாவில் பல மில்லியன் மக்கள் அஸ்ரா செனிக்கா தடுப்பூசியை எடுத்துள்ளார்கள். பிரித்தானியாவில் இவ்வாறான ரத்தக் கட்டிகள் ஏற்பட்டதாக எவரும் வைத்தியசாலை செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.