ஒவ்வொரு கொரோனா நோயாளிகளையும் விமானம் மூலம் பரிசில் இருந்து எடுத்துச் செல்லும் பிரான்ஸ் !

பரிஸ் நகரமே ஸ்தம்பிக்கும் அளவு கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில். பரிஸ் நகரில் இருந்து விமானம் மற்றும் ஹெலிகொப்டர் மூலமாக கொரோனா நோயாளிகளை வேறு நகரங்களுக்கு நகர்த்தி வருகிறது பிரான்ஸ் அரசு. பரிஸ் வைத்தியசாலைகள் முட்டி வழிவதாகவும். அங்கே இனி இடம் இல்லை என்றும் கூறப்படுகிறது. இன் நிலையில் பிரான்ஸில் போதிய அளவு தடுப்பு மருந்தும் இல்லை. இதனால் தடுப்பூசி வழங்கப்படுவது தற்காலிகமாக தடைப்பட்டுள்ளது.

ஆனால் பல நகரங்களில் மீண்டும் கொரோனா தொற்று தலை விரித்து ஆடுகிறது. பிரான்ஸ் நாட்டில் ஒரு வகையாக உருமாறிய கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளதாகவும். அது ஏற்கனவே கொரோனா வந்து குணமடைந்த நபர்களை கூட தாக்கி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.