இலங்கையில் பெண்களின் வீடுகளுக்குள் சென்று கட்டிலுக்குக்கீழ் பதுங்கியிருந்து கற்பழிக்கும் நபர்!

திருமணமாகாத பெண்கள் இருக்கும் வீடுகளுக்கு சென்று கட்டிலின் கீழ் பதுங்கி இருந்து அந்தப் பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் காலி- தெவட சியபலாகஹாவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதான நபர் ஒருவர் என விசாரணையின் போது தெரிய வந்துள்ளது.

அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதான பெண் ஒருவரின் வீடடிற்கு சென்று அப்பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற போது குறித்த பெண் கத்திக் கொண்டே வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

அதன்போது குறித்த சந்தேக நபர் அவ்விடத்தை விட்டு தப்பியோடியுள்ளார்.

பின்பு அந்தப் பெண் காவல்துறையில் புகாரளித்தமையையடுத்து சந்தேக நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் இதற்கு முன் இவ்வாறான செயல்களுக்காக நீதிமன்றத்தினால் தண்டிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.