‘ஒரே மாஸ்க்கில் மொத்த பேரையும் திரும்பி பார்க்க வைத்த யூடியூப் பிரபலம்’… அப்படி என்ன மாஸ்க் அது?

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்று வரும் கிராமி விருது வழங்கும் விழாவில் யூடியூப் பிரபலம் லில்லி சிங் அணிந்திருந்த மாஸ்க் பலரது கவனத்தையும் ஈர்த்தது.

YouTuber Lilly Singh\'s Pro-Farmers Message At The Grammys Red Carpet

இசைத் துறையில் சிறந்து விளங்குவோருக்கான கிராமி விருது வழங்கும் விழா அமெரிக்காவில் நடைபெற்றது. அதில், யூடியூப் பிரபலமான லில்லி சிங் கலந்து கொண்டார். அப்போது அவர் அணிந்து வந்த மாஸ்க்யை பார்த்த பலரும் ஆச்சரியத்தில் உறைந்து போனார்கள். அதில் இந்திய விவசாயிகளுக்குத் தான் ஆதரவு தெரிவிப்பதாகப் பொருள்படும் “I stand with farmers” என்ற வாசகம் எழுதப்பட்டு இருந்தது.

YouTuber Lilly Singh's Pro-Farmers Message At The Grammys Red Carpet

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி விவசாயிகள் டெல்லியில் 100 நாள்களுக்கும் மேலாக தங்களுடைய போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகி ரியானா தனது ட்விட்டர் பக்கத்தில் டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

டெல்லியைச் சுற்றியுள்ள பகுதிகளில் இணையச் சேவை துண்டிக்கப்படுவதாக வெளியான செய்தி ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ரியானா, “இது குறித்து ஏன் நாம் பேசவில்லை?” என்று கேள்வி எழுப்பினார். இதேபோல் பருவநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் கிரேட்டா தன்பெர்க், தனது ட்விட்டர் பக்கத்தில் “இந்தியாவில் போராடி வரும் விவசாயிகளுடன் நாங்கள் இணைந்து நிற்கிறோம்” என்று பதிவிட்டிருந்தார்.