சிறப்பாக நடந்து முடிந்த ‘பும்ரா’வின் ‘திருமணம்’… அவரே வெளியிட்ட ‘ஃபோட்டோ’ஸ்… குவியும் வாழ்த்து ‘மழை’… “பொண்ணு யாருன்னு பாருங்க!!”

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா, இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது, மூன்றாவது போட்டி முடிவடைந்ததும் தனிப்பட்ட காரணங்களுக்காக விடுப்பு எடுத்துக் கொள்வதாக, பிசிசியிடம் கோரிக்கை வைத்திருந்தார்.

jasprit bumrah ties knot with sanjana ganesan pics gone viral

அதன் பிறகு, டி 20 தொடரிலும் பும்ரா இடம்பெறாமல் போன நிலையில், அவர் விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தது. முதலில், மலையாள நடிகை அனுபமாவை திருமணம் செய்வதாக வதந்தி பரவிய நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் நிகழ்ச்சி தொகுப்பாளர் சஞ்சனா கணேசனை மார்ச் 16 ஆம் தேதியன்று, கோவாவில் வைத்து திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியானது.

jasprit bumrah ties knot with sanjana ganesan pics gone viral

இதனிடையே, சஞ்சனா கணேசன் செய்திருந்த சில பழைய ட்வீட்களும் வைரலாகியிருந்தது. இந்நிலையில், சஞ்சனா கணேசனை இன்று பும்ரா திருமணம் செய்துள்ள நிலையில், திருமண புகைப்படங்கள் சிலவற்றை பும்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

இவர்கள் இருவரின் திருமணம் குறித்து, பல்வேறு தகவல்கள் வெளியான போதும், இரு தரப்பில் இருந்து உறுதியான தகவல் வெளிவராமல் இருந்து வந்தது. ஆனால், தற்போது பும்ரா – சஞ்சனா கணேசன் திருமண புகைப்படங்கள் வெளியாகி அதனை உறுதி செய்துள்ளது. இந்திய வீரர் பும்ராவிற்கு, ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.