இனி தமிழர்கள் கோட்டாவை கவனிக்க தேவை இல்லை- அல் கைடா ராடரில் சிக்கினாரா ?

இலங்கையில் உள்ள 1,500 க்கும் மேற்பட்ட மதராசி முஸ்லீம் பாடசாலைகளை அரச கட்டுப் பாட்டில் கொண்டு வருவதோடு, முஸ்லீம் பெண்கள் இனி பர்த்தா அணிய முடியாது என்று இலங்கை அரசு தெரிவித்துள்ள விடையம், உலக அளவில் இலங்கை மீது பெரும் அதிருப்த்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல முஸ்லீம் நாடுகளும் அதிருப்த்தியடைந்துள்ளது. மேலும் சொல்லப் போனால் தற்போது அல்கைடா, ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற அமைப்புகளின் பார்வை இலங்கை மீது திரும்பியுள்ளது.

இது நாள் வரை கோட்டபாய அரசு தமிழர்களுக்கு எதிராக இருந்தது. ஆனால் தமிழர்கள் அறவழிப் போராட்டங்களில் ஈடு பட்டு வந்தார்கள். ஆனால் முஸ்லீம் தீவிரவாதிகள் அப்படி எதனையும் செய்யப் போவது இல்லை. அவர்கள் உடனடியாகவே இலங்கை அரசு மீது கடும் ஆத்திரம் அடைவார்கள் என்று எதிர்பார்கப்படுகிறது. ஏன் எனில் இலங்கை அரசு முஸ்லீம் பெண்கள் மீது கை வைத்துள்ளது.

இலங்கை அமைச்சர் ஒருவர் கொண்டுவந்துள்ள இந்த சட்டம், கோட்டபாயவின் மேசைக்கு சென்றுள்ள நிலையில். இதற்கு பாராளுமன்றம் அல்லது கோட்டபாய ஒப்புதல் கொடுக்க வேண்டும். எனவே தற்போது உலகளாவிய ரீதியில் கோட்டபாய முஸ்லீம் தீவிரவாதிகளின் கடும் எதிர்ப்பை சம்பாதித்துள்ளார். இதன் தாக்கம் எப்படி இருக்கும் என்று தமிழர்கள் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இது தொடர்பாக சற்று முன்(15) அல் ஜசீரா TVல் நடந்த பிரத்தியேக நிகழ்ச்சி இங்கே இணைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி ஒன்றே போதும் அனைத்து அரபு நாடுகளில் உள்ள மக்களும் இலங்கை தொடர்பான செய்தியை பார்த்திருப்பார்கள்.