அம்பிகையின் போராட்டத்தை பொய்யாக்கிய கும்பல்- தமிழர்களை ஏமாற்றியுள்ளது அம்பலம் !

 

கடந்த 27ம் திகதி தொடக்கம், 15ம் திகதி வரை உண்ணா விரதத்தை மேற்கொண்டு வந்த அம்பிகையின் போராட்டத்தையே, பொய்யாக்கி பிழையாக தகவல்களை வழங்கி போராட்டத்தை முடித்துள்ளது ஒரு கும்பல். உண்மையாக போராடிய அம்பிகைக்கும் இவர்களால் அவப் பெயர் ஏற்பட்டுள்ளது என்று தமிழ் நெட் இணையத்தளம் ஆதாரங்களோடு செய்தி வெளியிட்டுள்ளது. அம்பிகை விடுத்த 4 அம்ச கோரிக்கையில் குறைந்த பட்சம் ஒரு கோரிக்கையை பிரித்தானிய அரசு ஏற்றுள்ளதால், அவர் உண்ணாவிரத்த்தை கை விடுவதாக புலம் பெயர் சிவில் சம்மேளனம் என்ற அமைப்பு பொய்யான கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஆனால் 12ம் திகதி ஐக்கிய நாடுகளால் வெளியிடப்பட்ட கடிதமும் சரி, பிரித்தானிய வெளியுறவு துறை வெளியிட்டுள்ள கடிதத்திலும் சரி அவர்கள் நிலைப்பாட்டில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் ஐ.நா ஊடாக இலங்கையை கொண்டு செல்ல வேண்டும் என்று அம்பிகை தனது கோரிக்கைகளில் ஒன்றாக வைத்திருந்தார். அதில் அவர் வெற்றி பெற்று இருப்பதாகவும். குறிப்பிடத்தக்க மாற்றங்களை பிரித்தானிய அரசு திருத்தி மேற்கொண்டுள்ளதாகவும் இந்த கும்பல் கூறியுள்ளது. இதில் எந்த ஒரு உண்மையும் இல்லை. பிரித்தானியா ஐ.நாவுக்கு கொடுக்க உள்ள வரைபில் எந்த ஒரு மாற்றத்தையும் செய்யவில்லை என்பதே உண்மை.

எனவே தமிழர்களே அம்பிகையின் உண்ணா விரத முடிவில், எமது கோரிக்கைகள் வெல்லப்பட்டுள்ளது. அல்லது பிரித்தானிய அரசு செவி சாய்த்துள்ளது என்று கூறப்பட்டதில் எந்த ஒரு உண்மையும் இல்லை. என்பது ஆதாரங்களோடு தற்போது நிரூபனமாகியுள்ளது.  ஆதாரம்: https://www.tamilnet.com/art.html?catid=13&artid=39974