தலைமன்னார் கோர விபத்தில் மாணவன் பலி; அவசரமாக குருதி வழங்குமாறு கோரிக்கை!

தலைமன்னாரில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து புகையிரதத்துடன் மோதியதில், ஒரு மாணவன் பலியாகியுள்ளதுடன் 24 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

இன்று மதியம் 2 மணியளவில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் கொண்டு தலைமன்னார் நோக்கி பயணித்த பேருந்து, கொழும்பில் இருந்து தலைமன்னார் நோக்கிப் பயணித்த புகையிரதத்துடன் மோதுண்டே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் காயம் அடைந்துள்ளனர், இவ்வாறு காயமடைந்தவர்கள் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், வைத்தியசாலையில் குருதித் தட்டுப்பாடு நிலவுவதால், குருதிக் கொடையாளர்களிடம் வைத்தியசாலை நிர்வாகம் குருதி வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது, எனவே மன்னார் வாழ் மக்கள் விரைந்து குருதி வழங்க உதவுமாறு வேண்டிக்கொள்கிறோம்.