சாந்து பொட்டு… ஒரு சந்தன பொட்டு’… தேர்தல் பிரச்சாரத்தின் போது… ‘தேவர் மகன்’ சக்தியாக மாறிய கமல்!

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் கமல் காலையில் நடைபயிற்சி மேற்கொண்டு வாக்கு சேகரிக்கும் போது கமல் செய்த ஒரு சம்பவம் வைரலாகி வருகிறது.

makkal needhi maiam kamal haasan silambam in election campaign

அங்கு தங்கியிருந்து வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள கமல்ஹாசன், இன்று காலையில் கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டவாரே வாக்கு சேகரித்தார்.

அப்போது இராமநாதபுரத்தில் உள்ள சாண்டோ சின்னப்பதேவரின் தேகப்பயிற்சி நிலையத்துக்கு சென்ற கமல்ஹாசன், சிலம்பம் விளையாடிய சிறுமிக்கு பாராட்டு தெரிவித்து, தானும் கையில் சிலம்பெடுத்து சுற்றி அசத்தினார்.

தொடர்ந்து கடை வீதிகளில் மக்களை சந்தித்து மக்கள் அன்றாடம் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் குறித்து கவனமாக கேட்டு தெரிந்துகொண்டார்.

அப்போது ஒருவர், கோவையில் உள்ள சிறு குறு தொழிலாளர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்து எடுத்து கூறி நீங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த பிரச்சனைக்கான தீர்வு என்ன என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு கமல் அவரது பாணியிலேயே ஒரு பதிலை கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச்சென்றார்.

இதே கோவை தெற்கு தொகுதியில் கமலுக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வானதி சீனிவாசனும், காங்கிரஸ் கட்சி சார்பில் மயூரா ஜெயக்குமாரும் களம் இறங்கியுள்ளதால் களம் சூடுபிடித்துள்ளது.