வண்டி ஓட்டிகிட்டு இருந்தவரு…’ ‘என்ன நெனச்சாரோ தெரியல…’ ‘திடீர்னு வண்டிக்கு மேல ஏறி…’ ‘வண்டி அது பாட்டுக்கு போய்ட்ருக்கு…’ – வைரல் வீடியோ…!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் இளைஞர் ஒருவர் ஓடும் காரின் மீது ஏறி தண்டால் எடுக்கும் வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

உத்தரப்பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் தான் ஒட்டிவந்த மகேந்திரா ஸ்கார்பியோ காரை நெடுஞ்சாலையில் இயக்கவிட்டு, அவரே காரின் மேல்பகுதிக்குச் சென்றுள்ளார்.

இளைஞரின் இந்த செயலை வீடியோவாகவும் பதிவு செய்து வந்துள்ளார் ஒருவர். அதன்பின் காரின் மேற்கூரைக்குள் சென்ற அந்த இளைஞர் வீர சாகசமாக நினைத்து அங்கு தண்டால் எடுத்துள்ளார். இளைஞரின் இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவி பலரது கண்டனங்களையும் பெற்றுள்ளது.

எந்தவித முன்னேச்சரிக்கையும் இன்றி இந்த இளைஞர் செய்த அசட்டு தனமான செயல் பலருக்கு முன்னுதாரமாக இருக்க கூடாது என காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் இளைஞரைப் பிடித்த காவல்துறையினர் அவருக்கு அபராதம் விதித்து, தான் செய்தது தவறு என்று அந்த இளைஞர் கூறுவதையும் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர்.