பெற்ற 3 குழந்தைகளை தவிக்கவிட்டு 16 வயது சிறுவனுடன் மாயமான தாய்… அதிர்ச்சி சம்பவம்

3 குழந்தைகளுக்கு தாயான 29 வயது பெண் 16 வயது சிறுவனுடன் மாயமாகி உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.உத்திரபிரதேசம், கோரக்பூரில் கடந்த புதன்கிழமை சிவராத்திரி அன்று 29 வயது பெண் 16 வயது சிறுவனுடன் மாயமாகி உள்ளார். இருவரின் குடும்பத்தினரும் பெண் மற்றும் சிறுவனை தேடி எங்கும் கிடைக்கவில்லை. இதையடுத்து சிறுவனின் குடும்பத்தார் காம்பீர்கஞ்ச் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

மாயமான பெண் மற்றும் அந்த சிறுவன் கடந்த ஒரு வருடமாக நெருக்கமாக பழகி வந்துள்ளனர். இருவருக்கும் உள்ள வயது இடைவெளி காரணமாக அவர்கள் மீது சந்தேகம் ஏற்படவில்லை என்று அங்கிருந்தவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அடிக்கடி வீட்டுக்கு சிறுவன் வந்து சென்றுள்ளான். அக்கா அக்கா என்று தான் பேசுவான். ஆனால் இவர்கள் இருவருக்கும் இடையே உறவு இருந்துள்ளது.

இரவு நேர வேலை பார்த்த கணவன் தெரிவிக்கையில், 3 பிள்ளைகளின் தாயான இவள் இப்படி செய்வாள் என்று நான் கனவிலும் நம்பவில்லை என்று கூறினார். துணைக்கு வீட்டில் படுப்பதாக கூறி கூறி, அந்த சிறுவன் வீட்டில் வந்து படுத்து. இறுதியாக மனைவியை கூட்டிக் கொண்டு ஓடிவிட்டான் என்று அவர் கவலையோடு தெரிவித்துள்ளார்.