சமாதான பேச்சுவார்தை முறிவடைந்தது- எதற்கும் ஒப்புக் கொள்ளாத மெகான் மார்கள் !

கடந்த ஞாயிறு அன்று இளவரசரும் ஹரியின் அண்ணாவுமான வில்லியம் தொலைபேசி அழைப்பு ஒன்றை மேற்கொண்டு இருந்தார். அவர் முதலில் ஹரியோடு பேசி பின்னர் மெகான் மார்களோடும் பேசி இருந்தார் என்றும். இருப்பினும் பேச்சுவார்த்தையில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை என்றும் அவர்களுக்கு மிகவும் நெருக்கமான தோழி ஒருவர் தெரிவித்துள்ளார். இதேவேளை ஹரியின் அப்பா சார்ளஸ்சும் ஹரியோடு பேசி இருந்தார்.

குறித்த நிற வெறி பிரச்சனையை இத்தோடு கை விடுமாறு அவர்கள் இருவருமே கோரிக்கை விடுத்துள்ளார்கள். ஆனால் ஹரி அதற்கு எந்த ஒரு பதிலையும் தரவில்லை என்றும். இதேவேளை மெகான் மார்கள் நேரடியாகவே முடியாது என்று பதில் கொடுத்ததோடு. தன்னிடம் ஆதாரங்கள் உண்டு என்று வில்லியத்திடமும் சார்ளசிடமும் தெரிவித்துள்ளார். இத்தோடு பேச்சுவார்த்தை முறிவடைந்தது என்று தோழி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே அரச குடும்பத்தை பழி வாங்குவது என்ற மெகானின் முடிவில் எந்த மாற்றமும் இல்லை. இதேவேளை மனைவி சொல்லே மந்திரம் என்று ஹரியும் அவருடன் இணைந்து இருக்கிறார்.