உருத்திரபுரம் சிவன் கோவில் பகுதியில் புத்தர் சிலை இருப்பதாக கூறி துப்பரவுப் பணிகள்

கிளிநொச்சி – உருத்திரபுரம் சிவன் கோவில் பகுதியில் புத்தர் சிலை இருப்பதாக கூறி எதிர்வரும் மார்ச் 23ம் திகதி அவ்விடத்தில் தொல்லியல் அகழ்வுப் பணிகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு நேற்றைய தினம் காலை முதல் மாலை வரை அங்கு தொல்லியல் திணைக்களத்தினால் துப்பரவுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தேசிய மரபுரிமைகள், கலை கலாச்சார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க எதிர்வரும் 23ம் திகதி இவ் அகழ்வுப் பணிகளை ஆரம்பித்து வைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.