ஆஸ்கர் நாமினியை அறிவிக்க உங்களுக்கு என்ன தகுதி இருக்கு?’.. பத்திரிக்கையாளரின் கேள்விக்கு ‘நெத்தியடி’ பதில் கொடுத்த பிரியங்கா சோப்ரா..!

ஆஸ்கர் விருதுக்கான நாமினிகளை அறிவிக்க உங்களுக்கு என்ன தகுதி உள்ளது? என பத்திரிகையாளர் ஒருவர் ட்விட்டரில் எழுப்பிய கேள்விக்கு நடிகை பிரியங்கா சோப்ரா பதிலளித்துள்ளார்.

Priyanka Chopra slams journalist over announce Oscar nominees

Priyanka Chopra slams journalist over announce Oscar nominees

ஆஸ்கர் விருது விழா இந்த தடவை வழக்கம் போல நடத்தப்பட்டாலும் குறைந்த எண்ணிக்கையிலேயே பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். அதனால் நேரலையாக ஆஸ்கர் நிகழ்ச்சிகளை சமூக ஊடகங்கள் வாயிலாக காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு ஆஸ்கர் விருது விழாவில், விருது கொடுப்பதற்காக கலந்து கொண்ட பிரியங்கா சோப்ரா, இந்த ஆண்டு ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட படங்களின் பட்டியலை வெளியிட்டார்.

Priyanka Chopra slams journalist over announce Oscar nominees

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பத்திரிகையாளரான பீட்டர் போர்ட் என்பவர், ‘ஆஸ்கர் விருதுக்கான நாமினிகளை அறிவிக்க நடிகை பிரியங்காவுக்கு என்ன தகுதி உள்ளது?’ என ட்விட்டரில் கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு பதிலளித்த பிரியங்கா சோப்ரா, ‘ஒருவருக்கு என்ன தகுதி உள்ளது என்பது குறித்த உங்கள் கேள்விக்கு பதில் அளிக்க விரும்புகிறேன். இதோ எனது நடிப்பில் வெளியான 60-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை உங்கள் பார்வைக்கு சான்றாக வைத்துள்ளேன’ என தான் நடித்த படங்களின் தொகுப்பை பதிவிட்டு பதிலடி கொடுத்துள்ளார். பிரியங்கா சோப்ரா முதன்முதலில் நடிகர் விஜய்-ன் ‘தமிழன்’ படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.