அம்பானியின் மனைவிக்கு இப்படியொரு பதவியா? எழுந்தது சர்ச்சை!

ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் மனைவி நிடா அம்பானி. அவர், ரிலையன்ஸ் இன்டஸ்டிரியின் நிர்வாக இயக்குநராக இருந்துவருகிறார். ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவராகவும் நீடா அம்பானி இருந்துவருகிறார். இந்தநிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் சிறப்பு பேராசிரியராக நீடா அம்பானி நியமிக்கப்படவுள்ளார் என்று செய்திகள் வெளிவந்தன. கடந்த இரண்டு தினங்களாக பனாராஸ் இந்து பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக நீடா அம்பானி நியமிக்கப்படவுள்ளார் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இந்த தகவலை நீடா அம்பானியின் சார்பாக ரிலையன்ஸ் நிறுவனம் மறுத்துள்ளது. இதுதொடர்பாக ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் சிறப்பு பேராசிரியராக நீடா அம்பானி நியமிக்கப்படுகிறார் என்ற செய்தி தவறானது. அவரை, சிறப்பு பேராசிரியராக நியமிக்க எந்த அழைப்பும் வரப்பெறவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.