பிரித்தானியாவில் தடுப்பூசிகள் இல்லை: EU தடுப்பதனால் கையிருப்பு முடிவுக்கு வருகிறது

ஐரோப்பிய ஒன்றியம் பிரித்தானியாவுக்கு வரும் பைசர் மற்றும் மொடரீனா ஆகிய மருந்துகளை தடுத்து வரும் நிலையில். சுமார் 4 வாரங்களுக்கு தேவையான தடுப்பு ஊசிகளே கையிருப்பில் உள்ளதாக சற்று முன்னர் பிரித்தானிய சுகாதார துறை அமைச்சர் மட் ஹனக் தெரிவித்துள்ளார்.

எனவே பிரித்தானியா இன்னும் 4 வாரங்களில் மேற்கொண்டு எவருக்கும் தடுப்பூசி போட முடியாத நிலை தோன்றியுள்ளது. பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களோடு பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளது. இருப்பினும் பிரிட்டனுக்கு தடுப்பூசிகளை வழங்குவதை ஐரோப்பிய ஒன்றியம் அரசியலாக்கியுள்ளது.

அதுபோக பிரிட்டன் தயாரிக்கும் அஸ்ரா செனிக்கா தடுப்பு மருந்தை பாவிக்க வேண்டாம் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.