பிரிட்டன் முன் நாள் பிரதமர் டோனி பிளையரின் மனைவி தமிழர்களோடு கலந்துரையாடல்- தமிழர்களே தயாராகுங்கள் !

பிரித்தானிய முன் நாள் பிரதமர் டோனி பிளையர் அவர்களின் மனைவியும், QC தர அதி உயர் சட்ட வல்லுனருமான செரி பிளையர் அவர்கள் வரும் சனிக்கிழமை மதியம் தமிழர்களோடு உரையாட உள்ளார். அவர் ஈழத் தமிழர்களுக்கு சட்ட ரீதியாக உதவ முன் வந்துள்ள விடையம் இலங்கை அரசை கிலி கொள்ள வைத்துள்ளது. இதனை அடுத்து லண்டனில் உள்ள இலங்கை தூதுவர், ஈழத் தமிழர்களை சந்திக்க வேண்டாம் என்று அவரை தொடர்பு கொண்டு கேட்டுக் கொண்டுள்ளார். இருப்பினும் அவர் இலங்கையை சர்வதேச குற்றவியல் அரங்கிற்கு எப்படி கொண்டு செல்வது என்பது தொடர்பாக விரிவாக கலந்துரையாட உள்ளார்.

அவரோடு முன் நாள் ஐ.நா மனித உரிமை பேரவை ஆணையாளர், நவநீதம் பிள்ளை, மற்றும் டேவிட் மாட்டாஸ் ஆகியோர் தமிழர்களோடு ZOOM வழியாக இணைந்து கலந்துரையாட உள்ளார்கள். இவர்களோடு தமிழர் தரப்பில் இருந்து சம்பந்தன், மற்றும் விக்கினேஸ்வரன் ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள். எனவே அனைத்து தமிழர்களும் ZOOM வழியாக வரும் சனிக்கிழமை மதியம் 12.30 தொடக்கம் மாலை 5.30 வரை இணைந்து கொள்ளுங்கள். இது பிரித்தானிய தமிழர்களுக்கு மட்டும் என்று நினைத்துவிட வேண்டாம்.

உலகில் வாழும் ஒட்டு மொத்த ஈழத் தமிழர்களும் இதில் கலந்து கொள்ள முடியும். எனவே ZOOM செயலியை உங்கள் மோபைல் போனில் அல்லது லாப் டாப்பில் தரவிறக்கம் செய்து வைத்திருப்பது நல்லது. ஐ.டி மற்றும் பாஸ் வேட் கீழே தரப்பட்டுள்ளது.