மசாஜ் பார்லரில் நுழைந்த 21 வயது இளைஞன் கண்மூடித் தனமாக துப்பாக்கியால் சுட்டான்; பலர் பலி!

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள அட்லாண்டா நகரின் அக்வொர்த் பகுதியில் ஆசியாவைச் சேர்ந்த சிலர் மசாஜ் நிலையம் நடத்தி வருகின்றனர். அட்லாண்டாவின் புறநகர் பகுதியில் உள்ள இந்த மசாஜ் பார்லரில் நுழைந்த 21 வயது இளைஞன் கண்மூடித் தனமாக துப்பாக்கியால் சுட்டான். அதில் 4 பேர் கொல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து மேலும் 2 மசாஜ் சென்டர்களில் நடந்த தாக்குதலில் மேலும் 4 பேர் உயிரிழந்தனர்.

இதனை அடுத்து, துப்பாக்கிச் சூடு நடத்திய 21 வயதான ராபர்ட் ஆரோன் லாங்கை போலீசார் கைது செய்தனர். கொள்ளை முயற்சியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதா அல்லது வேறு காரணமா என விசாரணை நடைபெற்று வருகிறது.

இதில் கொல்லப்பட்டவர்களில் 6 பேர் ஆசியாவைச் சேர்ந்தவர்கள் என்றும் இதில் பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். மேலும் இதில் ஒருவர் காயத்துடன் மீட்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.