தொடர்ந்தும் வரலாற்று பிழைகளை விடும் அம்பிகை தரப்பு- மேலும் பொய்களை அள்ளிக் குவிக்கிறது !

அம்பிகையின் நெருங்கிய தோழி ஒருவர், நேற்று முன் தினம் வெளியிட்ட காணொளி ஒன்றில். திலீபன் உண்ணாவிரத சமயத்தில், துண்டு குலுக்கி போட்டு பார்கப்பட்டதாகவும். அதில் திலீபன் பெயர் வந்ததால் அவர் உண்ணா விரதம் இருந்ததாக கூறியுள்ளார். அதில் அம்பிகை பெயரும் இருந்ததாக பொய்யான தகவல் ஒன்றை பரப்பி வருகிறார். அவருக்கு ஒன்று புரியவேண்டும். திலீபன் உண்ணா விரதம் இருந்த கால கட்டத்தில் அவருடன் முழு நாட்களும் அருகில் இருந்த பல உண்மையான போராளிகள் இன்று வரை உயிரோடு இருக்கிறார்கள்.

குறிப்பாக திலீபன் உண்ணாவிரத நிகழ்வில் இறுதிக்கணம் வரை கூடவே இருந்து பங்கேற்ற “தேவர்” அண்ணா உள்ளார் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். திலீபன் உண்ணா விரதத்தில் அருகில் இருந்த சில போராளிகளை நாம் ஏற்கனவே தொடர்பு கொண்டு கேட்டவேளை. அம்பிகையின் தோழி கூறுவது பொய் என்று நிரூபனமாகியுள்ளது. இப்படி வரலாறுகளை திரித்து கூறவேண்டாம். அம்பிகையின் நண்பி இப்படி தவறான செய்தியை வெளியிட, அது பிழை என்று தெரிந்தும் அம்பிகை மெளனமாக இருப்பது அவரது குணம் எப்படியானது என்பதனை தெளிவாக மக்களுக்கு காட்டுகிறது.

எனவே அம்பிகையை தமிழ் இனத் தலைவி என்றும், அன்னை என்றும் அழைப்பதை முதலில் நிறுத்துங்கள். தலைவர் என்றால் அது எமது தேசிய தலைவர் பிரபாகரன் மட்டும் தான். அன்னை என்றால் அது அன்னை பூபதி, உண்ணா விரதம் என்றால் அது திலீபன். இவர்கள் தியாகங்களை எவராலும் அசைக்க முடியாது. வரலாற்றை மாற்றவும் முடியாது. சிலர் சொந்த நலன் கருதி தாம் அம்பிகைக்கு வெள்ளை அடிப்பதாக நினைத்து, பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார்கள்.