பாய்ச்சலுடன் களமிறங்கிய’கவாஸ்கி நிஞ்சா ZX -10R’… ‘செம கிளாஸான சிறப்பம்சங்கள்’… மலைக்கவைக்கும் பைக்கின் விலை!

இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ள புதிய கவாஸ்கி நிஞ்சா ZX -10R பைக்கில் பல சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது.

இந்தியாவில் புதிய கவாஸ்கி நிஞ்சா ZX -10R பைக் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த புதிய வகை பைக்கின் மொத்த வடிவமைப்புமே ரேசில் ஈடுபடும் விளையாட்டு வீரர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏரோடைனமிக் மற்றும் 3டி ரிவர் மார்க் பேட்ஜ் வசதிகளை உள்ளடக்கிய நிஞ்சா ZX -10R பைக்கில் அமைந்திருக்கும் ஹெட்லைட்ஸ்( எல்.இ.டி வசதியுடன்) கண்ணைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த வின்ட் ஷீல்டு உயரமான வின்ட் ஷீல்டு, எல்.இ.டி வசதி கொண்ட கண்ணாடிகள், டேங்க் பேடுடன் உள்ளடக்கிய மஸ்குலார் பெட்ரோல் டேங்க் ஆகியவை இடம்பெற்றுள்ளன. அதிகப்படியான நெகிழ்வு தன்மை கொண்ட இந்த பைக்கின் ஹேண்டில் பார் சற்று முன்னோக்கி நகர்த்தி வைக்கப்பட்டுள்ளது. ரேசில் ஈடுபடும் வீரர்கள் அதிகப்படியாக சரிய ஏதுவாக கால்பிடிகள் 5 எம்.எம் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த புதிய வகை நிஞ்சா பைக் லைம் கீரின் மற்றும் கருப்பு நிறம் ஆகிய இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்த புதியவகை ZX-10R பைக்கை ப்ளூ டூத் வசதி மூலம் மொபைலில் பொருத்தி கையாள முடியும். அதேபோன்று இந்த பைக்கின் விலையும் மலைக்கவைக்கும் வகையில் உள்ளது. நிஞ்சா ZX -10R பைக்கின் எக்ஸ் ஷோரூம் விலை 15 லட்சம் ஆகும்.

இதற்கிடையே பி6 ( 998cc)4 சிலிண்டர் என்ஜினை கொண்ட இந்த பைக்கில் கார்னர் மேனேஜ்மென்ட் சிஸ்டம், சிக்ஸ் ஆக்ஸிஸ் IMU, என்ஜின் ப்ரேக் கன்ரோல் உள்ளிட்ட பல வசதிகள் இடம்பெற்றுள்ளன. 43 எம்.எம் அளவிலான சஸ்பென்ஷன் வசதியை கொண்ட இந்த பைக்கில், ப்ரேக் வேற லெவலில் இருக்கிறது என்றே கூறலாம்.