தேர்தல் வரலாற்றிலேயே இப்படி ஒரு வாக்குறுதியை கேள்விப்பட்டிருப்போமா’?… ‘அசர வைத்த அதிமுக வேட்பாளர்’… வாயடைத்து போன மக்கள்!

தேர்தல் நெருங்கும் நிலையில் அதிமுக வேட்பாளர் கொடுத்த வாக்குறுதி, மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழகச் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தலைவர்கள் பலரும் சூறாவளி சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தனி தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ். நாகராஜன் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து திமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் தமிழரசி களத்தில் உள்ளார்.

இவர் 2011ஆம் ஆண்டு மானாமதுரை தொகுதியில் நின்று அதிமுகவிடம் தோற்றுப் போனவர் தோற்றுப் போனதுடன் தொகுதிக்குப் பக்கமே தலை காட்டவில்லை என்பதே எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு. இந்த குற்றச்சாட்டை முன்வைத்து, அதிமுக வேட்பாளர் நாகராஜன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ”கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர் தமிழரசி அதிமுகவை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தவர்.

தமிழரசி அதற்குப்பிறகு மானாமதுரை சட்டமன்றத் தொகுதி பக்கமே தலை காட்டவில்லை. ஆனால் நான் உள்ளூரில்தான் உள்ளேன் எனது வீடு இங்குதான் உள்ளது, மக்களின் குறைகளைத் தினந்தோறும் கேட்டு வருகின்றேன், நான் நல்லது கெட்டதுக்குச் சென்று வருகிறேன். எப்போதுமே சட்டமன்ற அலுவலகத்தில் தான் இருக்கிறேன். மக்களின் குறைகள் அனைத்தும் நான் என்னால் முடிந்தவரைத் தீர்த்து வைத்துள்ளேன்.

உங்களுக்கு உதவி. செய்கின்றேனோ இல்லையோ உயிர் உள்ளவரை உபத்திரம் செய்யாமல் இருப்பேன் என்று உங்களின் பொற்பாதம் தொட்டுக் கூறினேன், அதை எள்ளளவும் மாறாமல் இருந்து வருகின்றேன். எதாவது தவறாக நடந்து இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்” என்று கை கூப்பி மன்னிப்பு கேட்டார்.