சஞ்சனா ‘கை’-யை யாராவது நோட் பண்ணீங்களா.. வைரலாகும் ‘மெஹந்தி’ போட்டோ.. ஓகோ அதுக்கு இதுதான் காரணமா..?

பும்ராவின் மனைவி சஞ்சனா கணேசன் தனது கையில் போட்டுள்ள மெஹந்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Sanjana Ganesan’s Mehendi pictures goes viral

Sanjana Ganesan’s Mehendi pictures goes viral

அதனால் பும்ரா விரைவில் திருமணம் செய்ய போவதாக தகவல்கள் பரவின. அப்போது நடிகை அனுபமா பரமேஸ்வரனை பும்ரா திருமணம் செய்ய உள்ளதாக வதந்திகள் பரவி வந்தன. இந்த நிலையில் கோவாவில் வைத்து குடும்பத்தினர் முன்னிலையில் சஞ்சனா கணேசனை திருமணம் செய்துகொண்ட புகைப்படங்களை அதிகாரப்பூர்வமாக பும்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

Sanjana Ganesan’s Mehendi pictures goes viral

அதில், ‘நீங்கள் தகுதியானவர் என உங்களைக் காதல் கண்டறிந்தால் அது உங்களை இயக்கும். காதலால் இயங்குகிறோம். இருவரும் இணைந்து புதிய பயணத்தைத் தொடங்க இருக்கிறோம். எங்கள் வாழ்க்கையில் இன்று மகிழ்ச்சியான நாள். எங்களின் திருமண தகவலையையும், மகிழ்ச்சியையும் உங்களிடம் பகிர்வதால் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறோம்’ என பும்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

Sanjana Ganesan’s Mehendi pictures goes viral

Sanjana Ganesan’s Mehendi pictures goes viral

இந்த நிலையில் சஞ்சனா கணேசன் கையில் வரையப்பட்டுள்ள மெஹந்தியில், கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் போட்டிக்கான உலகக்கோப்பை லோகோ இடம்பெற்றுள்ளது.

அதனால் இருவரும் உலகக்கோப்பையின் போதுதான் காதலை வெளிப்படுத்தி இருப்பார்கள், அதற்கு அடையாளமாகதான் உலகக்கோப்பை லோகோவை சஞ்சனா கணேசன் தனது கையில் மெஹந்தியால் வரைந்துள்ளதாக நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் குறிப்பிட்டு வருகின்றனர்.