த்ரிஷாவை பரிதாபமாக பார்க்கும் முன்னணி நடிகர்கள்.. எப்படி இருந்த பொண்ணு, இப்படி ஆயிடுச்சே!

ஒரு காலத்தில் நிற்கக்கூட நேரமில்லாமல் தென்னிந்திய சினிமாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்துக் கொண்டிருந்த திரிஷாவின் கேரியர் தற்போது அதலபாதாளத்துக்குச் சென்றுவிட்டது.

துணை நடிகையாக இருந்து பின்னர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக மாறியவர் திரிஷா. தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் உருவாகும் கமர்சியல் படங்களில் முதன்மை நாயகியாக வலம் வந்தார்.

சினிமாவுக்கு வந்த இந்த 20 வருடங்களில் கிட்டத்தட்ட ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஒரு கட்டத்தில் திரிஷா தன்னுடைய மார்க்கெட் குறைவதை தெரிந்து கொண்டு தொழிலதிபர் வருண் மணியன் என்பவரை காதலித்து நிச்சயம் செய்து கொண்டார்.

ஆனால் அதன் பிறகு இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். பின்னர் தெலுங்கு நடிகர் ராணாவை காதலித்து வந்ததாகவும் செய்திகள் வெளியானது. ஆனால் திரிஷாவுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்பதை போல கடந்த வருடம் ராணா தன்னுடைய திருமணத்தை முடித்துக் கொண்டார்.

அதன்பிறகு துக்கம் தொண்டையடைக்க சமூக வலைதளத்தை விட்டே கிட்டதட்ட ஒரு மாதங்கள் ஓட்டம் பிடித்தார். பின்னர் சுதாரித்து வழக்கம்போல் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். ஆனால் முன்னர் போல் தற்போது அவரது மார்க்கெட் இல்லை என்பதை அவரே உணர ஆரம்பித்து விட்டாராம்.

நயன்தாராவெல்லாம் சோலோ ஹீரோயினாக நடிக்கிறார் என நானும் சோலோ ஹீரோயின் தான் என அவர் நடித்த ஐந்தாறு படங்கள் பொட்டிக்குள்ளேயே உறங்கிக் கொண்டிருக்கின்றன. போதாக்குறைக்கு முன்னணி நடிகர்கள் யாரும் திரிஷாவை கண்டுகொள்வதில்லையாம்.

இதனால் தற்போது சுத்தமாக மார்க்கெட் இல்லாமல் பட வாய்ப்பு வருமா என வழிமேல் விழிவைத்துக் காத்துக் கொண்டிருக்கிறாராம் த்ரிஷா. மேலும் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல புதுமுக நடிகர்கள் நடிக்கும் படங்களில் ஹீரோயின் வாய்ப்பு கேட்டு கடுப்பேத்துகிறார்களாம்.