தனுஷிடம் இருந்து அவர் மனைவி எதை திருடப் பார்க்கிறார்னு பாருங்க

கோலிவுட், பாலிவுட் என்று பிசியாக இருக்கும் தனுஷ் தற்போது தி கிரே மேன் ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். போயஸ் கார்டனில் புது வீட்டுக்கு பூமி பூஜை போட்ட கையோடு மனைவி ஐஸ்வர்யா, மகன்கள் யாத்ரா, லிங்கா ஆகியோருடன் அமெரிக்காவுக்கு கிளம்பினார் தனுஷ்.

அமெரிக்காவில் இருந்தபோது ஐஸ்வர்யா தன்னுடைய மற்றும் கணவர், பிள்ளைகளின் புகைப்படங்களை அடிக்கடி இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்து வந்தார். அவர் காய்கறி வாங்க கடைக்கு சென்ற இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் பலரையும் கவர்ந்தது.

ஐஸ்வர்யா தற்போது நாடு திரும்பிவிட்டார். ஐஸ்வர்யாவுக்கு புத்தகம் வாசிப்பது என்றால் மிகுவும் பிடிக்கும். அவரே ஒரு புத்தகம் எழுதி அதை கடந்த 2016ம் ஆண்டு வெளியிட்டார். இந்நிலையில் கணவர் தனுஷ் வைத்திருக்கும் புத்தகங்களில் எதை எடுத்து வாசிப்பது என்று கூறி இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டிருக்கிறார் ஐஸ்வர்யா.

அவர் புத்தகங்கள் படிக்கும் வேகத்தை பார்க்கும் ரசிகர்கள் வியக்கிறார்கள். யோகா செய்கிறீர்கள், குடும்பத்தை கவனித்துக் கொள்கிறீர்கள். அப்படி இருக்கும்போது இத்தனை புத்தகங்களை படிக்க உங்களுக்கு எப்படி நேரம் கிடைக்கிறது என்று தனுஷ் மற்றும் ரஜினி ரசிகர்கள் ஐஸ்வர்யாவிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

 

மனைவிமார்கள் கணவரிடம் இருந்து எதை எதையோ திருட நினைப்பார்கள், நீங்கள் புத்தகத்தை திருடப் பார்க்கிறீர்கள். நல்ல மனைவி, நல்ல கணவர் என்கிறார்கள் ரசிகர்கள்.

செய்யும்போது அதை புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். சில புகைப்படங்களை பார்த்து பலரும் வியந்தது உண்டு.

ஐஸ்வர்யா ஏன் மீண்டும் படங்களை இயக்காமல் இருக்கிறார் என்று ரசிகர்கள் அவ்வப்போது கேட்கிறார்கள். ஆனால் அந்த கேள்விக்கு ஐஸ்வர்யா இதுவரை பதில் அளிக்கவில்லை.

 

இதற்கிடையே மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் கர்ணன் படம் அடுத்த மாதம் 9ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது. அவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்த ஜகமே தந்திரம் ஓடிடியில் வெளியாகப் போகிறது.