என்னங்க இது?, நான் என்ன கேட்டேன் நீங்க என்ன அனுப்புனீங்க’… ‘வாடிக்கையாளரின் விசித்திர புகார்’… நொந்து நூடுல்ஸ் ஆன உரிமையாளர்!

வாடிக்கையாளர்கள் சில நேரங்களில் கொடுக்கும் புகார்கள் இணையத்தில் வைரலாவது உண்டு. அந்த வகையில் தற்போது வைரலான புகார் ஒன்று பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.

Customer orders a dozen masks, demands refund

அந்த உரையாடலில், ”ஹலோ, நான் ஒரு டசன் மாஸ்க்கை ஆர்டர் செய்திருந்தேன்; ஆனால் எனக்கு 12 மாஸ்க்குகளைத்தான் அனுப்பி இருக்கிறீர்கள். எனக்கு அனைத்தும் தேவைப்பட்டது. என்னுடைய பணத்தைத் திருப்பித் தாருங்கள். இனிமேல் உங்களுடைய வேலைக்கு உதவமாட்டேன். நான் சிறிய தொழில்களுக்கு உதவநினைத்தேன். ஆனால் நீங்கள் மக்களைக் கருத்தில் கொள்வதில்லை” என தெரிவித்துள்ளார்.

Customer orders a dozen masks, demands refund

அதற்குப் பதிலளித்த மெக்ரே,  டசன் என்றால் 12. நான் சரியாகத்தான் அனுப்பியுள்ளேன். அதனால் பணத்தைத் திருப்பித்தர முடியாது. ஆனால் நீங்கள் ஏமாற்றம் அடைந்ததற்காக 5 டாலர் கூப்பனை சலுகையாக அளிக்கிறேன். அதற்கு அந்த வாடிக்கையாளர் ‘’எனக்கு விருப்பமில்லை’’ என்று பதிலளித்துள்ளார்.

மேலும், விலைப்பட்டியலில் தான் அதைக் கவனிக்கவில்லை என்றும், தனக்கு 20 தேவைப்பட்டது என்றும், டசன் என்றால் 12 எனத் தான் கேள்விப்பட்டதே இல்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், ‘’அதைப் படிக்கும்போது டப் சென் ( dub zen)என தனக்குத் தெரிந்ததாகவும், டப் என்றால் 20 என்றும் கூறியிருக்கிறார்.