கணவரை தாக்கி பெண்ணை கற்பழிக்க முயற்சி செய்த கும்பல் இதுதான்!

சிக்கமகளூரு: அஜ்ஜாம்புரா அருகே கோவிலுக்குள் வைத்து கணவரை தாக்கி ெபண்ணை கற்பழிக்க முயன்ற 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த பரபரப்பு சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பெண்ணை கற்பழிக்க முயற்சி

சிக்கமகளூரு மாவட்டம் அஜ்ஜாம்புரா தாலுகா அந்தரகட்டே கிராமம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் புட்டய்யா (வயது 28). இவருடைய மனைவி சவிதா (24, இருவரின் பெயரும் மாற்றப்பட்டுள்ளது). இந்த நிலையில் கடந்த 16-ந்தேதி புட்டய்யாவும் அவருடைய மனைவி சவிதாவும் அந்தரகட்டே பகுதியில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றுள்ளனர். அப்போது அங்கு அதேப்பகுதியை சேர்ந்த 6 பேர் வந்துள்ளனர்.

அவர்கள் கோவிலுக்குள் வைத்து சவிதாவிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னா் கோவிலுக்குள் வைத்தே சவிதாவின் சேலையை உருவி அவரை மானபங்கப்படுத்த முயன்றதுடன், கற்பழிக்கவும் முயற்சி ெசய்துள்ளனர்.

கணவர் மீது தாக்குதல்

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த புட்டய்யா அவர்கள் 6 பேரையும் தடுக்க முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் 6 பேரும் புட்டய்யாவை சாதியை கூறி திட்டியதுடன் அவரை சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் புட்டய்யா பலத்த காயமடைந்தார். மேலும் அவருடைய ஒரு கையில் எலும்பு முறிவும் ஏற்பட்டது.

இதையடுத்து அந்தப்பகுதியில் இருந்தவர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்கள் 6 பேரும் அங்கிருந்து சென்றுவிட்டனர்.
இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த புட்டய்யா, ஆஸ்பத்திரிக்கு ெசன்று சிகிச்சை பெற்றுக்கொண்டார். இந்த சம்பவம் குறித்து புட்டய்யா, அஜ்ஜாம்புரா போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

5 பேர் கைது

இந்த நிலையில் இந்த சம்பவம் சிக்கமகளூரு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அக்‌ஷய் மச்சீந்திராவின் கவனத்துக்கு சென்றது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அஜ்ஜாம்புரா போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு அக்‌ஷய் மச்சீந்திரா உத்தரவிட்டார். அதன்பேரில் அஜ்ஜாம்புரா போலீசார் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களில் 5 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் அதேப்பகுதியை சேர்ந்த யோகேஷ் (24), சந்தோஷ் (28), சசிகுமார் (29), சிவக்குமார் (26), மனு (24) என்பது தெரியவந்தது. மேலும் இந்த வழக்கில் ஒருவர் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். கைதான 5 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.