தன் மேல தப்புன்னு தெரிஞ்சும் ‘இளம்பெண் செய்த ஆபாச செயல்’… ‘ஆனா, மொத்தமும் ‘KTM’ பைக்கர் கேமராவில் ரெகார்ட்’… இணையத்தை கலங்கடித்த வீடியோ…

சாலையில் விதிமுறையை மீறிய இளம்பெண் ஆபாசமாக நடந்து கொண்ட வீடியோ வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Video : Girl on Honda Activa showed middle finger to KTM Biker

இந்த சம்பவம் குறித்த பரபரப்பு அடங்குவதற்குள் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. வட இந்தியாவில் இளைஞர் ஒருவர் தனது KTM Duke பைக்கில் ரைட் சென்று கொண்டு இருக்கிறார். அப்போது ஒரு சிறிய சாலையில் இளம்பெண் ஒருவர் தனது மொபைல் போனில் பேசியவாறு  சாலையில் வரும் வாகனத்தைக் கவனிக்காமல் அலட்சியமாகச் சாலையைக் கடக்க முயல்கிறார். அப்போது பைக்கில் வந்த இளைஞர் சுதாரித்துக் கொண்டு இளம்பெண் மீது மோதாமல் பைக்கை நிறுத்துகிறார்.

Video : Girl on Honda Activa showed middle finger to KTM Biker

உடனே அந்த இளைஞர், இப்படி சாலை விதிகளைப் பின்பற்றாமல் மொபைல் போனில் பேசி கொண்டு பைக்கில் இப்படிச் செல்லலாமா எனக் கேட்கிறார். உடனே அந்த பெண் அதற்குப் பதில் சொல்லாமல், தன் மீது தான் தவறு என்பதையும் உணர்ந்து கொள்ளாமல், விரலால் ஆபாசமான செய்கையைச் செய்கிறார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த இளைஞர், தவறை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் இப்படி ஆபாசமாக நடந்து கொள்கிறாரே எனப் புலம்பித் தீர்க்கிறார்.

ஆனால் அந்த பெண்ணோ தன் மீது எந்த தவறும் இல்லை என்ற ரீதியில் கன்னா பின்னா எனக் கத்திக் கொண்டே இருக்கிறார். அப்போது சாலையில் நின்ற பலரும் இந்த சம்பவத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டே இருந்தனர். ஆனால் அங்கு நடந்த அனைத்து சம்பவங்களும் அந்த இளைஞர் தனது ஹெல்மட்டில் பொருத்தியிருந்த கேமராவில் ரெகார்ட் ஆகிக் கொண்டே இருந்தது. இது அந்த பெண்ணிற்குத் தெரியவில்லை.

Video : Girl on Honda Activa showed middle finger to KTM Biker

இந்நிலையில் அந்த இளைஞர் தனது மனதிலிருந்த ஆதங்கத்தைக் கொட்டிவிட்டு அங்கிருந்து தனது பைக்கை எடுத்துவிட்டுக் கிளம்புகிறார். அப்போது அந்த இளம்பெண் தனது இருசக்கர வாகனத்தில் அந்த இளைஞரைத் துரத்தி வந்து அவரை ஓரமாக பைக்கை நிறுத்த சொல்கிறார். அந்த இளைஞரும் பைக்கை நிறுத்த, வா போலீஸ் ஸ்டேஷன் போகலாம் என அந்த இளம்பெண் கூறுகிறார். உடனே அந்த இளைஞர், சரி வாங்க இருவரும் போகலாம் என கூறுகிறார். மேலும் இங்கு நடந்த அனைத்தும் எனது கேமராவில் ரெகார்ட் ஆகி உள்ளது.

காவல்நிலையத்தில் அனைத்தையும் கொடுக்கிறேன், அப்போது யார் மீது தவறு என்பது புரியும் என அந்த இளைஞர் கூறிய பின்னர் தான் அந்த இளம்பெண்ணுக்குப் பயம் தொற்றிக் கொள்கிறது. அதுவரை போலீஸ் ஸ்டேஷன் போகலாம் எனக் கூறிய அந்த இளம்பெண் அதற்குப் பிறகு பின்வாங்க ஆரம்பிக்கிறார். இவ்வாறு அந்த வீடியோ முடிவடைகிறது. இந்த வீடியோவை அந்த இளைஞர் பதிவிட அந்த சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Video : Girl on Honda Activa showed middle finger to KTM Biker

வீடியோவை பார்த்த பலரும், அந்த இளம்பெண்ணின் செயலுக்குக் கடுமையான கண்டனங்களைப் பதிவிட்டு வந்த நிலையில், இந்த வீடியோ முழுவதுமே திட்டமிட்டு எடுக்கப்பட்ட வீடியோ என கூறப்பட்டுள்ளது. இணையத்திலும் பலரும் இந்த வீடியோ குறித்து வீடியோ பதிவிட்டுள்ளார்கள். அதே நேரத்தில் இதுபோன்று திட்டமிட்டு எடுக்கப்படும் வீடியோகள் சமூகத்தில் எதிர்மறையான பிம்பத்தை உருவாக்குவதோடு சமூகவலைத்தளங்களில் வெளியாகும் செய்திகள் குறித்த நம்பகத்தன்மையைக் கேள்விக்குறியாக்கும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது.