கர்ப்பிணி பெண்ணை கொலை செய்து அவரது வயிற்றில் இருந்த குழந்தையை திருடிய பெண்!

பிரேசிலில் நேற்று மதியம், பமீல்லா பெரீரா (21) என்ற கர்ப்பிணி இளம்பெண், கொடூரமாக தாக்கப்பட்டு கொலைசெய்யபட்டார். அவரது வயிற்றில் இருந்த குழந்தையையும் காணவில்லை . குழந்தையை போலீசார் தேடிக்கொண்டிருக்க, அதே நேரத்தில், அருகிலுள்ள மருத்துவமனை ஒன்றிற்கு 22 வயதுள்ள என்ற பெண், குழந்தை ஒன்றுடன் சென்றுள்ளார். ஆனால், அந்த குழந்தை உயிருடன் இல்லை.

வீட்டில், தானே குழந்தை பெற்றுக்கொண்டதாகவும், குழந்தையுடன் படியிலிருந்து இறங்கும்போது தடுக்கி விழுந்துவிட்டதாகவும் அந்த பெண் கூறியுள்ளார் ஆனால், மருத்துவர்கள் அவரை பரிசோதித்தபோது அதற்கான அடையாளங்கள் எதுவும் அவரிடம் இல்லை. சந்தேகமடைந்த மருத்துவமனை நிர்வாகம் போலீசாருக்கு தகவலளித்தது. போலீஸ் விசாரணையில், அந்த பெண் கர்ப்பமுற்றிருப்பதுபோல் நடித்துவந்ததும், சம்பவம் நடப்பதற்கு முன்தினம், அவர் பமீல்லாவுடன் கூட இருந்ததும் தெரியவந்துள்ளது.

குழந்தை எப்படி இறந்தது என்பதை அறிவதற்காக, அதற்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. தனக்கு ஒரு குழந்தை வேண்டும் என்பதற்காக பெண் ஒருவர் ஒரு கர்ப்பிணிப்பெண்ணை கொடூரமாக கொலை செய்து, அவரது வயிற்றை கிழித்து குழந்தையை எடுத்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.