கீர்த்தி சுரேஷுக்கு ஊட்டிவிடும் பிரபல நடிகர் வீடியோ.. எல்லை மீறி போறீங்க சார்!

படப்பிடிப்பு தளத்தில் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு பிரபல நடிகர் ஒருவர் பீட்சா ஊட்டிவிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. மேலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோ ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

கீர்த்தி சுரேஷ் உடல் எடையை குறைத்த பிறகு பெரிய அளவு பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார். இருந்தாலும் கிடைத்த பட வாய்ப்புகளை விட்டுவிடக்கூடாது என்பதற்காக இதுவரை இல்லாத அளவுக்கு தான் நடிக்கும் படங்களுக்கு புரமோஷன் செய்து வருகிறார். அந்த வகையில் அடுத்ததாக தெலுங்கு சினிமாவில் கீர்த்தி சுரேஷ் நடித்த ராங்குதே என்ற படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு ஜோடியாக நிதின் என்பவர் நடித்துள்ளார்.

தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்த படத்தை வெங்கி என்பவர் இயக்கியுள்ளார். மேலும் ஒளிப்பதிவை பிசி ஸ்ரீராம் செய்துள்ளார். ஊரடங்கு சமயத்தில் எதிர்பார்த்த திரைப்படங்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஒரு வழியாக மார்ச் 26 ஆம் தேதி உலகமெங்கும் ராங்குதே திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பில் கீர்த்தி சுரேஷ் மற்றும் நடிகர் நிதின் இருவரும் சேர்ந்து செய்த சேட்டைகளை வீடியோவாக வெளியிட்டது ரசிகர்களை கவர்ந்துள்ளது.

அதில் கீர்த்தி சுரேஷுக்கு நிதிஷ் பீட்சா ஊட்டிவிட்ட வீடியோதான் இணையத்தில் தற்போது ஒரே ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்து ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்று தற்போது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.