தம்பி பிறக்கும் போது அம்மாவின் கைகளில் எப்படி இருந்தானோ அப்படியே இறந்தான்.. லண்டனில் அக்கா …

வீட்டில் வைத்து டிசைனர் ஜாக்கெட்டுகளை வாங்கி விற்று வந்துள்ளார் ஹூசைன் அகமட் என்னும் இந்த 18 வயது இளைஞர். டாமி-கில்ஃபிகர், நைக்கி போன்ற விலை கூடிய ஜாக்கெட்டுகள் இவர் வீட்டில் இருக்கும் என்று அறிந்த சில திருடர்கள், அவரது வீட்டை 17ம் திகதி மாலை முற்றுகையிட்டுள்ளார்கள். கத்திகளுடன் சென்ற திருடங்கள், அவரது அக்காவின் கையில் கத்தியால் வெட்டியுள்ளார்கள். இதனைப் பார்த்த ஹூசைன், தனது குடும்ப அங்கத்தவர்களை காப்பாற்ற ஓடிச் சென்று கத்திக் குத்துகளை தான் வாங்கிக் கொண்டார்.

அதிலும் அவரது கழுத்தில் கத்திக் குத்து இன்று விழுந்த நிலையில். கள்வர்கள் சில ஜாக்கெட்டுகளை எடுத்துக் கொண்டு தப்பி ஓடி விட்டார்கள். ரத்த வெள்ளத்தில் இருந்த ஹுசைன் அம்மாவின் கைகளில் பரிதாபமாக துடி துடித்து இறந்து போனார். இந்த சம்பவம் லண்டன் லெயிட்டனில்(LEYTON) கடந்த 17ம் திகதி மாலை இடம்பெற்றுள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது. என் தம்பி எப்படி பிறந்த போது அம்மாவின் கைகளில் இருந்தானோ, அப்படித் தான் சாகும் போதும் இருந்தான்.

அவன் கண்களில் நான் பயத்தை பார்க்கவில்லை. அவன் கடவுளிடம் சென்று விட்டான். கொஞ்சம் பொறுத்துக் கொள் நாங்களும் வருகிறோம் என்று அக்கா உருக்கமாக பதிவிட்ட விடையம் லண்டன் பத்திரிகைகளில் முதல் இடத்தை பிடித்துள்ளது. லண்டனில் கத்திக் குத்துச் சம்பவங்கள் முன் எப்பொழுதும் இல்லாதவாறு பன் மடங்காக அதிகரித்துள்ளது. எனவே தமிழர்களே உங்கள் வீடு என்றாலும் சரி, உங்கள் டீன் ஏஜ் பிள்ளைகள் வெளியே செல்வது என்றாலும் சரி, ஒரு கண் வைத்திருப்பது நல்லது. நல்லது கெட்டது எது என்ன செய்ய வேண்டும் என்பதனை சொல்லிக் கொடுப்பது நல்லது.

அதிர்வுக்காக,
கண்ணன்: