30 இலங்கை நபர்கள் 3 படகில் ஆயுதங்களோடு லட்ச தீவு அருகே கைது … என்ன நடந்தது ?

அரபிக்கடல் பகுதியில் அமைந்துள்ள லட்சத்தீவுக்கூட்டங்களின் மினிக்கோய் தீவு அருகே 3 படகுகள் சந்தேகத்துக்கு இடமான வகையில் சென்று கொண்டிருந்ததை இந்திய கடலோர காவல்படை அதிகாரிகள் கண்டறிந்தனர். உடனடியாக கடலோர காவல்படையின் படகுகள் மற்றும் ஹெலிகாப்டர் அங்கு விரைந்து சென்றன. பின்னர் அந்த 3 படகுகளையும் சுற்றி வளைத்து அவற்றில் சோதனையிடப்பட்டது.

அப்போது அந்த படகுகளில் 300 கிலோ ஹெராயின், 5 ஏ.கே.ரக துப்பாக்கிகள், 1000 தோட்டாக்கள் போன்றவை இருந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் உடனடியாக அந்த படகுகளை அருகில் உள்ள துறைமுகத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு விசாரணை நடத்தியதில், படகில் 30 இலங்கையர்கள் பயணம் செய்துள்ளமை தெரியவந்துள்ளது.