இது எல்லாமே கனவு மாதிரி இருக்கு!.. அதிசயமா தெரியுது’!.. தமிழகத்து மாப்பிள்ளை பும்ராவின் ROMANCE!.. ‘ஏம்பா 90S கிட்ஸ்.. கத்துக்கோங்க பா’!!

இந்திய அணியின் முக்கிய பந்து வீச்சாளர் பும்ராவின் திருமணம் குறித்து, அவர் கூறியுள்ள கருத்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

bumrah shares pics with wife sanjana ganesan says magical

இந்நிலையில், தற்போது தனது மனைவியுடனான புகைப்படத்தை தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ள பும்ரா, அனைத்துமே அதிசயமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முக்கிய பௌலர் ஜஸ்பிரீத் பும்ரா இங்கிலாந்துக்கு எதிரான கடந்த டெஸ்ட் போட்டியின் இரு போட்டிகளில் மட்டுமே பங்கேற்றார். இதையடுத்து தனது திருமணத்தை முன்னிட்டு அவர் விடுப்பு எடுத்திருந்தார். ஆனால் அவரது திருமணம் பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்தது.

அவர் திருமணம் செய்யும் நபர் குறித்து பல்வேறு யூகங்களை சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் ஏற்படுத்தினர். ஆனால், அவர் இதுகுறித்து அவர் வாய் திறக்காமல் இருந்தார். அவரது திருமணம் கடந்த 15ம் தேதி நடைபெற்ற நிலையில், அவர் சஞ்சனா கணேசனை மணமுடித்து அதுகுறித்து அறிவிப்பையும் வெளியிட்டு அனைத்து யூகங்களுக்கும் தடை போட்டார்.

இந்நிலையில், தற்போது அவர் தனது மனைவி சஞ்சனாவுடன் தான் இருக்கும் புகைகப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கடந்த சில தினங்கள் மிகவும் அதிசயமானதாக உள்ளதாக அவர் தனது கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளார். ரசிகர்களிடம் இருந்து தங்களுக்கு கிடைத்துள்ள அன்பு மற்றும் வாழ்த்துக்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

 

 

பும்ரா  தன்னுடைய திருமணத்தையொட்டி டெஸ்ட் தொடரின் இறுதிப்போட்டி, டி20 மற்றும் ஒருநாள் போட்டித் தொடர்களிலும் அவர் பங்கேற்கவில்லை. அடுத்ததாக ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்று விளையாடுவார் என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 3வது டி20 போட்டியின் தோல்வியை அடுத்து பாலிவுட் ஸ்டார் ரன்வீர் சிங், பும்ரா இந்திய அணியில் மீண்டும் இணைந்தால் அனைத்தும் சிறப்பாகிவிடும் என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.