அம்பி பச்சை பொய் சொல்கிறார்: தேவர் அண்ணா அதிரடி அறிவிப்பு: திலீபனையே கொச்சைப்படுத்த திட்டம் ?

ஆதார வீடியோ கீழே உள்ளது !
தேசிய தலைவர் மேதகு வேலுப் பிள்ளை பிரபாகரன் அவர்களால், நேரடியாக பணிக்கப்பட்டவர் தேவர் அண்ணா. தியாக தீபம் திலீபன் அண்ணா உண்ணா விரதம் இருப்பது உறுதியான உடனே, அதனை சரி வர செய்து முடிக்குமாறு தேவர் அண்ணைக்கு தான் தலைவர் கட்டளை பிறப்பித்தார். அந்த வகையில் உண்ணாவிரதம் ஆரம்பம் முதல் இறுதி வரை மேடையில் இருந்தவர் தேவர் அண்ணா. அவர் கூறுகையில், இந்த அம்பிகையோ இல்லை அவரது தாயோ அங்கே வந்து கூட திலீபனை பார்க்கவில்லை என்றும்.  உண்ணா விரதம் இடம்பெற்ற வேளை அவர்கள் சென்னையில் இருந்தார்கள் என்றும் கூறியுள்ளார். சீட்டுக் குலுக்கிப் பார்க்கப்பட்டதாகவும். அதில் தீலீபன் அண்ணா பெயர் வந்ததால், அவர் உண்ணாவிரதம் இருந்தார் என்று கூறுவது ஒரு பச்சைப் பொய். இப்படி தனது சுய நலத்திற்காக அம்பிகை பச்சை… பச்சை பொய் கூறுகிறார் என்றால், இவரை எப்படி தமிழ் மக்களே நம்பப் போகிறீர்கள் ? . தேவர் அண்ணா யாரிடமும் பேசி விடக் கூடாது என்று. அவரோடு உடனே தொடர்பு கொண்டு, தனது கதையை நியாப் படுத்தி உள்ளார் அம்பிகை. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். இவ்வாறு பொய்… பித்தலாட்டம் காட்டும் அம்பிகை பின்னால் யார் போகப் போகிறீர்கள் ? ஆதார வீடியோ கீழே உள்ளது !