கோட்டாபய அரசின் கீழான அழிவைப்போல எந்த அரசையும் காணவில்லை; பொங்கியெழுந்த தேரர்!

கோட்டாபய அரசாங்கத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் சுற்றாடல் அழிவு போல வேறு எந்தக் காலத்திலும் தான் இதுபோன்ற அழிவைக் காணவில்லை என ஓமல்பே சோபித்த தேரர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

“தற்போதைய அரசாங்கம் பாரிய அளவில் சுற்றாடலை அழிக்கிறது. மரங்கள், செடிகளை இந்தளவு அழிக்கும் யுகத்தை இதுவரை நாம் காணவில்லை. இதனை மிகவும் வேதனையுடன் தெரிவிக்கிறோம். யாருடைய அதிகாரத்தை பயன்படுத்தி இவ்வாறு செய்கின்றனர்?

20வது திருத்தச் சட்டத்தின் மூலம் ஜனாதிபதிக்கு மென்மேலும் அதிகாரம் வழங்கியது நாட்டை பாதுகாக்கவே. அவர் பொறுப்புடன் சட்டத்தை நடைமுறைப்படுத்த தலைப்பட வேண்டும். அதனால் இடம்பெறும் காடழிப்பு, சுற்றாடல் அழிப்பு, மோசடிகள் என்பவற்றை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

ஜனாதிபதி இது குறித்து உடனடி கவனம் செலுத்த வேண்டும்” என ஓமல்பே சோபித்த தேரர் தெரிவித்துள்ளார்.