வவுனியாவில் மனைவியையும் மகளையும் வாளால் வெட்டிய குடும்பத்தலைவர் ஓடிவிட்டார்!

வவுனியாவில் தனது மனைவியையும் மகளையும் வாளால் வெட்டிய குடும்பத்தலைவர் தலைமறைவாகி உள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றையதினம் இரவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதில் தாயும் மகளும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வாள்வெட்டில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படும் நபர் தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.