விடுதலைப்புலிகளுக்கு எதிராக இலங்கையில் உருவாகியுள்ள ஆவணப்படம்; பல நாடுகளில் ஒளிபரப்பபோகிறார்களாம்; எல்லாம் சதி..!

விடுதலைப்புலிகள் செய்த போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச சமூகத்திற்கு தெரிவிப்பதை நோக்கமாகக் கொண்டு இலங்கையில் தயாரிக்கப்பட்ட ஆவணப்படம் இன்று முதல்முறையாக சர்வதேச அரங்கில் திரையிடப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இது இன்று பிரிட்டன், அமெரிக்கா, சுவீடன், கனடா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் காட்சியிடப்பட உள்ளது.

இந்த ஆவணப்படம் எதிர்காலத்தில் பிற நாடுகளிலும் திரையிட திட்டமிடப்பட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46 வது அமர்வில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்த வாக்கெடுப்பு நாளை நடைபெற உள்ளது நிலையில் இந்த ஆவணப்படம் வெளியிடப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.