‘மேட்ச்’ல ஆக்ரோஷமா ஆடுற ‘மனுஷன்’.. இப்போ என்னடான்னா ‘குழந்தை’ மாதிரி ‘ஜாலி’யா இருக்காரே??”.. சூர்யகுமாரின் லேட்டஸ்ட் ‘வீடியோ’… செம ‘வைரல்’!!

இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ், பல ஆண்டுகள் ஐபிஎல் மற்றும் முதல் தர போட்டிகளில் சிறப்பாக ஆடி வந்த போதும், சர்வதேச இந்திய அணியில் இடம் கிடைக்காமல் இருந்து வந்தது.

suryakumar yadav latest video like a kid is going viral

suryakumar yadav latest video like a kid is going viral

தொடர்ந்து, நான்காவது போட்டியில், சூர்யகுமார் யாதவ் மீண்டும் களமிறங்கினார். இந்த போட்டியில், அவருக்கு பேட்டிங்கிற்கு வாய்ப்பு கிடைத்த நிலையில், முதல் போட்டி என்ற எந்தவித பதட்டமும் இல்லாமல், பந்துகளை நாலாபுறமும் சிதறடித்தார். அதிலும் குறிப்பாக, தான் சர்வதேச போட்டியில் சந்தித்த முதல் பந்தையே, சிக்சருக்கு அடித்து அதிரடியுடன் ஆரம்பித்திருந்தார்.

suryakumar yadav latest video like a kid is going viral

அறிமுக போட்டியிலேயே அரை சதமடித்து அசத்திய சூர்யகுமார் யாதவ், 57 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணியின் வெற்றிக்கும் மிக முக்கிய காரணமாக அமைந்த அவர், ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார். இந்நிலையில், போட்டிக்கு பின்னர், சூர்யகுமார் குழந்தை போல சிரித்து மகிழும் வீடியோ ஒன்று தற்போது நெட்டிசன்களிடையே அதிகம் வைரலாகி வருகிறது.

suryakumar yadav latest video like a kid is going viral

அந்த வீடியோவில், நான்காவது போட்டி முடிவுக்கு பின்னர், தான் பேட்டிங் செய்த வீடியோவை மீண்டும் குழந்தை போல சிரித்துக் கொண்டே இருக்கும் சூர்யகுமாரிடம், அவரது மனைவி, அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது பற்றி கேட்க, ‘நான் அடித்த பவுண்டரிகளை மீண்டும் ஒரு முறை பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறேன்’ என சூர்யகுமார் யாதவ் கூறினார்.

தொடர்ந்து பேசும் அவரது மனைவி, ‘எந்த போட்டியில் ஆடினாலும், அதன் பிறகு, தனது பேட்டிங்கை இது போல டிவி அல்லது மொபைல் போனில் கண்டு சிரித்துக் கொண்டே இருப்பார்’ என கூறுகிறார்.

 

மைதானத்தில் ஆக்ரோஷமாக, அதிரடி ஆட்டத்தில் ஈடுபடும் சூர்யகுமார் யாதவ், போட்டிக்கு பின்னர் இப்படி குழந்தை போல தனது பேட்டிங்கையே ரசித்து பார்த்துக் கொண்டிருக்கும் வீடியோ, தற்போது நெட்டிசன்களிடையே அதிகம் வைரலாகி வருகிறது.