பள்ளிகள் ஆரம்பிக்கப் பட்டதால் லண்டனில் கொரோனா தொற்று திடீரென எகிறியுள்ளது !

பிரித்தானியாவில் பள்ளிக்கூடங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், வெகுவாகக் குறைந்திருந்த கொரோனா தொற்று மீண்டும் ஆரம்பித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று 5,532 பேருக்கு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது என சுகாதார துறை சற்று முன்னர் அறிவித்துள்ளது. ஆனால் இறப்பு விகிதம் வெகுவாக குறைந்துள்ளது. இதற்கு வேறு ஒரு காரணமும் உண்டு. இனி இறக்க முதியவர்கள் எவரும் இல்லை என்ற நிலை பிரித்தானியாவில் உள்ளது.