மீண்டும் தளபதிக்கு வில்லனாகும் துப்பாக்கி பட வில்லன். இது தான் இப்பா ஹாட் டாக்காக உள்ளது !

தளபதி 65 படத்தில் விஜய்க்கு வில்லனாக வித்யூத் ஜம்வால் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக விஜய் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகவுள்ள தனது 65 வது படத்தில் விஜய் நடிக்கவுள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைக்கவுள்ளார்.இந்த படத்தில் படத்தில் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா பணியாற்ற உள்ளதாகவும், நடன இயக்குனராக ஜானி மாஸ்டர் பணியாற்ற உள்ளதாகவும், அவர்களே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். மேலும் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாக தகவல் பரவி வருகிறது.

இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்திற்கான பூஜை மற்றும் படப்பிடிப்பு வருகின்ற ஏப்ரல் 16 ஆம் தேதி முதல் பூஜையுடன் தொடங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக நவாசுதீன் சித்திக் நடிக்கவுள்ளதாக தகவல் பரவி வந்த நிலையில், அவர் நடிக்கவில்லை என்றும் விஜய்க்கு வில்லனாக நடிகர் வித்யூத் ஜம்வால் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.