பசறை கோரவிபத்தால் அநாதரவாக்கப்பட்ட மூன்று இளம் பிஞ்சுகள்; அரசாங்கம் என்ன செய்கிறது?

பசறை கோர விபத்தில் கணவன் மனைவி இருவரும் பலியாகிய நிலையில் அவர்களது மூன்று சிறிய பிள்ளைகளும் அநாதரவாக விடப்பட்டுள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் தெரிய வருவதாவது,

குறித்த விபத்தில் பெனடிக் மற்றும் மெடோனா தம்பதிகள் உயிரிழந்துள்ளனர்.

பெனடிக், சிகிச்சையொன்றிற்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு சென்றவேளை அவருடன், அவரது மனைவி மெடோனாவும் துணைக்கு சென்றுள்ளார்.

இவர்கள் இருவரும் பஸ் தரிப்பிடத்திற்கு வருகை தந்தவேளை ,சற்று நேரத்திற்கு முன்பதாகவே பஸ் புறப்பட்டு சென்றுள்ளதாக அங்கு நின்றவர்கள் தெரிவித்துள்ளனர்.

உரிய நேரத்தில் வைத்தியசாலைக்கு செல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இந்த இருவரும் முச்சக்கரவண்டியொன்றை வாடகைக்கு அமர்த்தி , இடைநடுவில் பஸ்ஸை பிடித்துள்ளனர்.

இவ்வாறு பஸ்ஸில் ஏறிய பெனடிக் மற்றும் மெடோனா தம்பதிகள் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

பெனடிக், இரும்பு பொருத்தும் பணியில் ஈடுபட்டு வந்த ஒருவர்.

வறுமை கோட்டின் கீழ் வாழும் இவர்களுக்கு, இரு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை என மூன்று சிறிய பிள்ளைகள்.தற்போது அந்த குழந்தைகளின் எதிர்காலம் குறித்து கவலைகள் அதிகரித்துள்ளன.