ஐ.ரோப்பிய ஒன்றிய தலைவியின் அட்டகாசம்: பிரிட்டனுக்கு மருந்துகள் வருவதை தடை செய்கிறார் !

ஆஸ்ரா செனிக்கா என்ற தடுப்பு மருந்தை, பிரித்தானியா கண்டு பிடித்தது. பிரித்தானியாவில் அது சிறிய அளவில் தான் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் நெதர்லாந்தில் உள்ள மிகப் பெரிய தொழிற்சாலையில் தான் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு. அது பிரித்தானியாவுக்கு கொண்டு வரப்படுகிறது. இன் நிலையில் 19 மில்லியன் ஆஸ்ரா செனிக்கா மருந்தை பிரித்தானியாவுக்கு கொண்டுவர, ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்தும் தடை விதித்து வருகிறது.

அப்படி என்றால் கூட பரவாயில்லை, ஆனால் அந்த தடுப்பூசியை தயாரிக்க ஏதுவான மூலக் கூறுகளை கூட பிரித்தானியா அனுப்ப ஐரோப்பிய ஒன்றிய தலைவி வான் டோவ் மறுத்து வருகிறார். இதனால் பிரித்தானிய கடும் ஆத்திரமடைந்துள்ள நிலையில். பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் நேரடியா களத்தில் இறங்கியுள்ளார். பிரான்ஸ் , ஜேர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளே பிரித்தானியாவுக்கு மருந்து செல்வதை தொடர்ந்தும் தடுத்து வருகிறது.

இன் நிலையில் 50 வயதுக்கு உட்பட்ட நபர்களுக்கு கொரோனா ஊசி போடுவதில் 2 மாதம் மேலும் தாமதமாகும் நிலை தோன்றியுள்ளது. இது போக ஏற்கனவே ஊசி போட்ட நபர்களுக்கு , 2வது ஊசி போட முடியாத நிலையும் தோன்றலாம்.