தமிழனின் வீட்டை உடைத்து அடாவடி செய்த முஸ்லிமை தாக்கிய பிக்கு; தமிழர்களின் நிலையை பாருங்க!

அம்பாறை பொத்துவில் கனகர் கிராமத்தில் முஸ்லீம்நபர் ஒருவர் அமைத்த கொட்டகையொன்றை பிக்குமார் குழுவொன்று அடித்துடைக்கும் காட்சிகள் நேற்றையதினம் சனிக்கிழமை முதல் முகநூல்களில் காணொலியாக பகிரப்பட்டுவந்தது.

இந்த சம்பவம் தமிழ், முஸ்லிம் சிறுபான்மை மக்களிடையே பெரும் பரபரப்பையும், கோபத்தையும் ஏற்படுத்தியிருந்தது, தொடர்ந்து இவ்வாறான பிக்குமார்களின் அடாவடி குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, இதற்கு முடிவு எடுத்தாக வேண்டுமென முகநூல்களில் பதில் கருத்துக்களை வெளியிட்டு வந்தனர் சிறுபாண்மை சமூகத்தினர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட குறித்த முஸ்லீம் நபரிடம் வினவிய போது, நான் 38 வருடமாக இங்கு இருக்கிறேன், இங்கு பல பயன்தரும் மரங்களை வைத்திருக்கிறேன், இந்நிலையில் திடீரென நுழைந்த பிக்குமார் குழுவொன்று என்னை தாக்கியதாகவும் தொடர்ந்து என் கொட்டகை மற்றும் பயன்தரும் மரங்களை அழித்துள்ளதுடன் நீ எப்படி எங்கள் பகுதியில் வசிப்பாயென மிரட்டியதாகவும் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் முஸ்லிம் நபரின் கொட்டகையை உடைத்து அழித்த பிக்குமார் தரப்பில் வினவிய போது, அம்பாறை பொத்துவில் கனகர் கிராமம் தமிழர்களின் கிராமம், ஆனால் இங்கு இருக்கும் கிராம சேவகர் உட்பட பல அரச ஊழியர்கள், முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர்கள், இவர்களின் உதவியுடன் தமிழர் வசித்து வந்த குறித்த கொட்டகை அமைக்கப்பட்டிருந்த காணியை, நாங்கள் தாக்கியதாக கூறிக்கொண்டிருக்கும் குறித்த முஸ்லிம் நபர், அடாவடியாக அந்த காணியை பிடித்து அங்கிருந்து வருகிறார்.

இதன் காரணமாகவே தமிழரின் காணியை நீ எப்படி வலுக்கட்டாயமாக பிடிப்பாய், இந்த காணியை கொடுத்து விட்டு நீ வெளியேற வேண்டும் என கூறிய போது அவர் மறுத்தார், இதனையடுத்தே அந்த கொட்டகையை பிடிங்கி எறிந்துவிட்டு, அவரை வெளியேற்ற முயற்சித்ததாக தெரிவித்திருக்கின்றனர்.