வீடு ரொம்ப பழசா இருக்குதேன்னு வருத்தப்படாதீங்க…’ ‘தமிழக முதல்வர் அளித்த வாக்குறுதிகள்…’ – எங்க ஆட்சியில மட்டும்தான் கரண்ட் கட் கிடையாது…!

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது, சிறு குறு தொழில்களை தொடங்க கடன் வழங்கப்படும் எனக் கூறினார்.

Edappadi Palanisamy promised to repair the damaged houses

                                  Edappadi Palanisamy promised to repair the damaged houses

அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், திமுக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி என விமர்சித்தார்.

Edappadi Palanisamy promised to repair the damaged houses

அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றிக்கூட்டணி எனவும் அடித்தட்டு மக்களைப் பற்றி சிந்திக்கும் கூட்டணி எனவும் கூறினார்.

Edappadi Palanisamy promised to repair the damaged houses

தடையில்லா மின்சாரம் வழங்கும் ஒரே அரசு அதிமுக அரசு எனக் கூறிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சியில் 5 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் ஓசூர் பகுதியில் ஏராளமான வேலை வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.