திலீபன் சாதிக்கவில்லை அன்னை பூபதி சாதிக்கவில்லை அம்பிகை சாதித்தார்- நா கூசாமல் பேசும் காசி…

தியாக தீபம் திலீபன் கோரிக்கையை, எவரும் ஏற்க்கவில்லை. அன்னை பூபதியின் கோரிக்கையை எவரும் ஏற்க்க வில்லை. ஆனால் லண்டனில் அம்பியின் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என்று கொஞ்சம் கூட நா கூசாமல் உணர்சி கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் பேசியுள்ள விடையம். பல போராளிகளை மட்டும் அல்ல, தமிழர்கள் மனதையும் முள்ளாய் தைக்கிறது. எமது விடுதலைக்காக பெரிய தொண்டுகள் ஆற்றிய இவர்களில் சிலர், தற்போது இந்திய அரசின் பிடியில் இருந்து கொண்டு. தமிழர்களை கொச்சைப்படுத்துவது தான் வேலியே பயிரை மேயும் கதையாக உள்ளது. ஆதார வீடியோ கீழே இணைப்பு

பிரித்தானியாவில் மட்டும் அல்ல, உலகில் உள்ள அனைத்துத் தமிழர்களுக்கும் தெரியும் லண்டனில் அம்பி என்ற அம்பிகை முன் வைத்த 4 கோரிகைகளையும் பிரித்தானிய அரசு ஏற்றுக் கொள்ளவில்லை என்பது. ஆனால் ஒரு தரப்பு அந்த போராட்டம் வென்று விட்டது என்று காட்ட பல நபர்களை பிழையாக வழி நடத்தி வருகிறது. அது வேறு யாரும் அல்ல, பிரித்தானியாவில் ஆக்ஸ்பேட்டில் காணி வங்கி தனியாக மாவீரர் தின நிகழ்வுகளை நடத்திவரும் குழு தான். இவர்களே சீமானை, கமலஹாசனை, மற்றும் சத்தியராஜ் போன்றவர்களை பிழையாக வழி நடத்தி வருகிறார்கள்.

மேலும் சொல்லப் போனால் இவர்கள் இந்தியர்கள், அவர்களுக்கு சிலவேளை ஆழமாக இலங்கை பிரச்சனை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் காசி ஆனந்தன் அவர்கள் எவ்வாறு இப்படி ஒரு அறிவித்தலை வெளியிட்டு வரலாற்று துரோகம் இழைத்தார் என்று தான் இன்று வரை புரியவில்லை. ஒரு வேளை சொந்தக்காரர்களுக்காக இவ்வாறு துரோகம் செய்கிறாரா ? என்ற கேளிவியும் கூடவே எழுகிறது.