’15 வருஷம் முன்னாடி இத யோசிச்சிருக்கணும்’… ‘பக்கவாதம் வந்து வீட்டு வாசலில் தவம் கிடக்கும் கணவர்’… வீட்டுக்குள் விடாமல் மனைவி சொல்லும் காரணம்!

பக்கவாதத்தால் பாதித்து 15 வருடம் கழித்து வீட்டிற்கு வந்த கணவனை, மனைவி வீட்டிற்குள்’அனுமதிக்காத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Man returns home after 15 years but family refused

ஒரு கட்டத்தில் வாங்கிய கடன் தனது கழுத்தை நெறிக்க வேறு வழியில்லாமல், 5 ஏக்கர் நிலத்தை விற்றுவிட்டுக் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு யாரிடமும் சொல்லாமல் பெங்களூருவுக்குச் சென்றுள்ளார். கணவன் திடீரென சொல்லாமல் கொள்ளாமல் போனது அவரது மனைவி பிரபாவதியை நிலைகுலையச் செய்தது. ஒன்றை ஆளாக பிரபாவதி, தனது பிள்ளைகளைக் கஷ்டப்பட்டு வளர்த்துக் கரை சேர்த்துள்ளார்.

Man returns home after 15 years but family refused

இந்த நிலையில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து சிவராமு தனது வீட்டுக்கு வந்துள்ளார். இதனால் தான் அவரை அவரது குடும்பத்தினர் வீட்டுக்குள் சேர்க்கவில்லை என்று கூறினர். தன்னை குடும்பத்தினர் வீட்டில் சேர்க்க வேண்டும் என்றும், எனது உயிர் இந்த வீட்டில் தான் போக வேண்டும் என்றும் சிவராமு உருக்கமாகக் கூறி வருகிறார்.

இந்நிலையில் கை கால்கள் செயலிழந்த நிலையில், சிவராமு காடு கொத்தனஹள்ளியில் உள்ள தனது வீட்டின் அருகில் படுத்த படுக்கையாகக் கிடக்கிறார்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.