திடீரென தீப்பற்றி எரிந்த வீடு’!.. விசாரணையில் தெரியவந்த ‘பகீர்’ காரணம்.. நடந்த அதிர்ச்சி..!

சென்னையில் செல்போன் சார்ஜர் வெடித்ததால் குடிசை வீடு எரிந்து தரைமட்டமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Mobile charger exploded and the house caught fire in Pallavaram

சென்னை அடுத்த பல்லாவரம் பம்மல் அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் பால தேசிங்கு ராஜா. இவருக்கு அப்பகுதியில் சொந்தமாக குடிசை வீடு ஒன்று இருந்துள்ளது. இதனை வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். இந்த நிலையில் இன்று காலை அனைவரும் வேலைக்கு சென்றுவிட்ட நிலையில், ஒரு இளைஞர் மட்டும் வெளியே குளித்துக் கொண்டு இருந்துள்ளார்.

Mobile charger exploded and the house caught fire in Pallavaram

அப்போது திடீரென குடிசை தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், உடனே தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றுள்ளனர். ஆனால் அதற்குள் தீ மளமளவென பற்றி எரிந்ததால், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து தீயணைப்புத்துறையினர் வருவதற்குள், வீட்டிலிருந்த துணி, பணமெல்லாம் எரிந்து சாம்பலாகின.

Mobile charger exploded and the house caught fire in Pallavaram

இதுகுறித்து தகவலறிந்ததும் பல்லாவரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், வீட்டில் இருந்த செல்போன் சார்ஜர் வெடித்ததில் குடிசை தீப்பற்றி எரிந்தது தெரியவந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.