தனிமையில் இருந்த போது வீடியோ’… ‘சைக்கோ கணவனின் வாட்ஸ்அப்பில் இருந்த வீடியோ ஸ்டேட்டஸ்’… ஐடி பொறியாளரின் அதிரவைக்கும் மறுபக்கம்!

தனிமையிலிருந்த போது வீடியோ’… ‘சைக்கோ கணவனின் வாட்ஸ்அப்பில் இருந்த வீடியோ ஸ்டேட்டஸ்’… சென்னை ஐடி பொறியாளரின் அதிரவைக்கும் மறுபக்கம்!கணவன் மனைவிக்குள் இருக்கும் தாம்பத்திய உறவையே ஆயுதமாகப் பயன்படுத்தி, கணவனே மனைவியை மிரட்டியுள்ள சம்பவம் சென்னையில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Chennai IT employee arrested for Posting his Wife nude video

இதனிடையே திருமணத்திற்குப் பின்னர் சபீக் அகமதுவிற்கு ஒரு சைக்கோ தனமான பழக்கம் இருந்துள்ளது. அதாவது, மனைவியுடன் தாம்பத்திய உறவில் இருக்கும் போது அதை வீடியோவாக எடுத்து வைத்துக் கொள்ளும் பழக்கம் அவரிடம் இருந்துள்ளது. இந்நிலையில் சபீக் அகமதுவின் மூன்றாவது மனைவியும், ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்ற ஐதராபாத்தை சேர்ந்த அந்த பெண், சென்னை மாநகர ஆணையாளருக்குக் கண்ணீர் மல்க புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.

Chennai IT employee arrested for Posting his Wife nude video

அதில், ”சபீக் அகமது கொரோனா காலத்தில் வீட்டிலிருந்து பணி செய்தார். அப்போது நான் கர்ப்பமானேன். இது பிடிக்காமல் என்னைக் கட்டாயப்படுத்தி மருத்துவமனைக்கு அழைத்து சென்று கருக்கலைப்பு செய்தார். இதுகுறித்து நான் பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றும் அளித்து இருந்தேன். இதனால் கணவருடன் வாழ எனக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. இதனால் ஐதராபாத்தில் உள்ள எனது தாய் வீட்டிற்கு சென்று விட்டேன். இந்நிலையில், சபீக் அகமது போன்செய்து தன்னுடன் குடும்பம் நடத்தும்படி அழைத்தார்.

Chennai IT employee arrested for Posting his Wife nude video

மேலும் எனது வாட்ஸ் அப் எண்ணிக்கு வீடியோ, புகைப்படங்களும் அனுப்பி மிரட்டி வருகிறார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார். இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார், சபீக் அகமதுவைப் பிடித்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார், சபீக் அகமதுவை பிடித்து விசாரணை நடத்தினர்.  அதில், சபீக் அகமது பீகாரை சேர்ந்தவர். வியாபாரம் தொடர்பாக சில ஆண்டுகளுக்கு முன்புதான் அவர், அவரது பெற்றோருடன் சென்னையில் குடியேறி உள்ளார்.

கான்பூரை ேசர்ந்த பெண்ணை சபீக் அகமது முதல் திருமணம் ெசய்துள்ளார். அந்த பெண்ணை கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளார். அவரையும் சபீக் அகமது இருவரும் தனிமையில் இருந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை அனுப்பி மிரட்டியுள்ளார். இதுகுறித்து அந்த பெண் கான்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Chennai IT employee arrested for Posting his Wife nude video

பிறகு பெங்களூரை சேர்ந்த பெண்ணை 2வது திருமணம் செய்துள்ளார். அவரையும் ஆபாச வீடியோக்களை காட்டி மிரட்டியுள்ளார். இதனால், அவரும் பிரிந்து சென்றுவிட்டார். 3வதாக திருமணம் செய்த பெண்ணையும் அதேபோல் வீடியோ எடுத்து அனுப்பி மிரட்டியது விசாரணையில் உறுதியானது. இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் மென்பொறியாளர் சபீக் அகமதுவை கைது செய்தனர். அவரிடம் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட அந்தரங்க வீடியோ மற்றும் புகைப்படங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சைக்கோ தனமாக கணவனே இத்தகைய கொடூர செயலில் ஈடுபட்டுள்ள சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், கணவனாகவே இருந்தாலும் ஒருபோதும் இதுபோன்ற செயல்களை அனுமதிக்காதீர்கள் என போலீசார் எச்சரித்துள்ளார்கள்.