படுதோல்வியில் மண்ணை கவ்விய கோத்தா அரசு; நண்பனுக்காக பொங்கியெழுந்த சுப்பு!

ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் 11 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதில் இந்தியா இலங்கைக்கு ஆதரவும் வழங்கவில்லை. எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. நடுநிலை வகித்தது.

இந்த நிலையில் இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவரும் இலங்கையில் ராஜபக்ஸ அரசாங்கத்தின் நெருங்கிய நண்பருமான சுப்ரமணியன் சுவாமி தனது கருத்தை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அமெரிக்க எழுத்தாளரான டேல் கார்னகியின் “நண்பர்களை எளிதாகப் பெறுவதும் மக்களிடம் செல்வாக்குடன் விளங்குவது எப்படி?” என்ற புத்தகத்திற்கு எதிராக மோடியின் அரசாங்கம் “நண்பர்களை இழந்து எதிரிகளை எவ்வாறு ஊக்குவிப்பது” என்பது தொடர்பில் ஒரு புத்தகத்தை எழுத வேண்டும். என் பதிவிட்டுள்ளார்.

மேலும் நாங்கள் நேபாளம், பூட்டான், இலங்கையை இழந்து சீனா மற்றும் பாகிஸ்தானுடள் இராணுவ கூட்டுப் பயிற்சியை ஊக்குவித்தோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.