இலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றி; இலங்கை வெளிவிவகார அமைச்சர் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?

ஐ.நா மனித உரிமைப்பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு 22 நாடுகள் ஆதரவை வழங்கி வெற்றியடையச் செய்துள்ளன.

11 நாடுகள் இந்த தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்திருந்தன.

எனினும் 14 நாடுகள் இதில் வாக்களிக்காமல் நடுநிலை வகித்தன.

இந்த நிலையில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தமது டுவிட்டர் கணக்கில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.

அதில், வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாத 14 நாடுகளின் பெயர்களை குறிப்பிட்டு, ஜெனீவாவில் இந்த 14 நாடுகளும் இலங்கைக்கு காட்டிய ஆதரவை பாராட்டுவதாக என பதிவிட்டுள்ளார்.

மேலும் ஐநாவில் இலங்கைக்கு ஆதரவு தெரிவித்த நாடுகளுக்கும் இவர் தமது நன்றிகளை தெரிவித்துள்ளார்.